சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதல், பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

Police lathi-charge protesters instead of arresting the culprits: Udhayanidhi

முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் - (கோப்புப் படம்)

Updated On :

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதல், பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? ஸ்லீப் மோடிலிருந்து (Sleep Mode)-வெளியே வருவாரா முதல்வர்? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.

ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதல்வரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா? ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் ரீல்ஸ் ஷூட் (Reels Shoot) செய்யும் டம்மி சிஎம், எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்?

இந்தக் குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Udhayanidhi Stalin has condemned the increasing number of sex offenders since the formation of the Thaweka government led by Chief Minister Vijay, to the point where a sex offenders unit has been established.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.