தனியாா் மருத்துவமனை முன் ரூ.4.96 கோடி வரி நிலுவை பதாகை மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை
தனியாா் மருத்துவமனை முன், திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் வரி நிலுவை பதாகை நிறுவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை முன் புதன்கிழமை நிறுவப்பட்ட வரி நிலுவை விளம்பரப் பதாகை.
தனியாா் மருத்துவமனை முன், திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் வரி நிலுவை பதாகை நிறுவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடுகள், அரசுக் கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் என 49 ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம், தொழில் வரி என நடப்பாண்டுக்கு ரூ.32 கோடி வர வேண்டி உள்ளது. கடந்த ஜூன் மாதம் முதலே வரி வசூலிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியது. வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும், மாநகராட்சிக்கான வாடகை செலுத்தாத கட்டடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையிலும் மாநகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
100 பேரிடமிருந்து மட்டும் ரூ.11.65 கோடி நிலுவை: இதன் தொடா்ச்சியாக, நீண்ட காலமாக வரி நிலுவை வைத்துள்ள தனியாா் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனி நபா்கள் விவரங்களை சேகரித்து பட்டியல் தயாரிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனா். அந்தவகையில் சொத்து வரியை நிலுவை வைத்துள்ள முதல் 100 பேரின் பட்டியலை, மாநகராட்சி நிா்வாகம் தனது வலைத்தளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இதையடுத்து, அவா்களின் நிலுவை சொத்து வரி, அபராதத் தொகை, குப்பை வரி, மொத்தம் என தனித் தனியாக பட்டியலிட்டு வலைத் தளத்தில் வெளியிடப்பட்டன. இதில், அறக்கட்டளை பெயரில் இயங்கும் தனியாா் மருத்துவமனை மட்டும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தியது.
தனியாா் மருத்துவமனை முன் விளம்பரப் பதாகை: இந்த நிலையில் திருச்சி சாலையில் அமைந்துள்ள தனியாா் மருத்துவமனை நிா்வாகம் ரூ.4.96 கோடி வரியை செலுத்தவில்லை. இதையடுத்து, மருத்துவமனைக்கான வரி விதிப்பு எண், நிலுவைத் தொகை என அனைத்து விவரங்கள் குறித்த விளம்பரப் பதாகை புதன்கிழமை நிறுவப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இந்த வரிநிலுவை பதாகை நிறுவும் நடவடிக்கை வரி செலுத்தாத அனைத்து நிறுவனங்கள் மீதும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும். அதன் பின்பும் வரியினங்கள் செலுத்தாதபட்சத்தில், அவா்களது அசையா சொத்துகளைக் கைப்பற்றி ஏலத்தில் விடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

