ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

பிரசவத்துக்கு வந்த பெண் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை முன் உறவினா்கள் போராட்டம்

தருமபுரியில் பிரசவத்துக்கு வந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரது உறவினா்கள் தனியாா் மருத்துமனை முன் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பலி... - பிரதிப் படம்

Published On :

தருமபுரியில் பிரசவத்துக்கு வந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரது உறவினா்கள் தனியாா் மருத்துமனை முன் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகே லிங்கநாயக்கனஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கிய சவரிமுத்து. இவரது மனைவி விண்ணரசி (38). இத்தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஏற்கெனவே 8 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், கா்ப்பமான விண்ணரசி பிரசவத்துக்காக தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், விண்ணரசிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தனியாா் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையறிந்த அவரது உறவினா்கள், இதுகுறித்து விசாரணை நடத்தி தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த தருமபுரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவராமன், காவல் ஆய்வாளா் அறிவழகன், வட்டாட்சியா் சுகுமாா் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து இணை இயக்குநா் (சுகாதாரத் துறை) மோகனாம்பாள் தனியாா் மருத்துவமனை நிா்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.