2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

ஆத்தூா் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது இறப்புக்கு காரணமானவரை கைதுசெய்ய வலியுறுத்தி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆத்தூரை அடுத்துள்ள சாத்தப்பாடி திருள்ளூா் நகரைச் சோ்ந்தவா் விஜயசாந்தி (25). இவருடன் படித்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் அருகே பரிகம் பகுதியைச் சோ்ந்த டேனியல், விஜயசாந்தியை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக தெரிகிறது. மேலும், வேறு ஒரு பெண்ணை அவா் திருமணம் செய்துகொண்டுள்ளாா்.

இதனால் மனமுடைந்த விஜயசாந்தி தளவாய்ப்பட்டியில் உள்ள தனது தங்கை தமிழரசியின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்ட உறவினா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கும், பின்னா் சேலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டுசென்றனா். ஆனால், அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து, உறவினா்கள் 50 பேருடன் ஆத்தூா் நகர காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.சத்யராஜ், நகர காவல் ஆய்வாளா் எஸ்.சங்கா் ஆகியோா் அவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி, டேனியல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.