சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!
சிங்கப்பூர் செல்ல சென்னை விமான நிலையம் வந்த வீரமணியின் மகள் அர்ச்சனா தடுத்து நிறுத்தப்பட்டது பற்றி..

வீரமணி - கோப்புப்படம்
சிங்கப்பூர் செல்ல சென்னை விமான நிலையம் வந்த ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணி தடுத்து நிறுத்தப்பட்டார்.
அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற முயன்ற போது கடைசி நேரத்தில் அர்ச்சனாவை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் வீரமணி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அர்ச்சனா ஒப்படைக்கப்பட்டார். இதனால் சிங்கப்பூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று 12 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் இருந்து அழைத்துச் சென்று அர்ச்சனாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு, ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை செய்கின்றனா். ஏற்கெனவே அக். 15 முதல் 17 ஆம் தேதி வரையில் இரு நாள்கள் வீரமணியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மீண்டும் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகிய நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு நேற்று மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Archana Veeramani, daughter of Gem Veeramani, who had come to the Chennai airport to travel to Singapore, was intercepted and detained.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


