FOLLOW US

ON GOOGLE DISCOVER

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து...

CM Vijay

கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 8:18 am IST

இன்றைய சட்டப்பேரவையில் விவாதம் இருக்காது என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், 18 நாள்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

செப். 3-ல் முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற நிலையில், அதற்கான பதிலுரையை இன்று (செப். 7) வழங்கவுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.

இன்றைய சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் சட்டத் திருத்த மசோதாவை முதல்வா் விஜய் அறிமுகம் செய்யவுள்ளாா்.

தொடா்ந்து, 2026 தமிழ்நாடு ஊராட்சிகள் 2-ஆம் திருத்த மசோதாவை, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆனந்த், 2026 தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதாவை, வணிகவரித் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோா் அறிமுகம் செய்யவுள்ளனா்.

இதனிடையே, முதல்வர் விஜய்யின் பதிலுரையும் இன்று நடைபெறவிருப்பதால், இன்றைய சட்டப்பேரவைத் தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு விவாதம் இருக்காது என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Summary

No debate in the Legislative Assembly today, says Speaker JCD Prabhakar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.