எம்எல்ஏ-க்களின் உடல்நலம் காக்க ரூ. 23 கோடி செலவில் உடற்பயிற்சிக் கூடம்: ஜேசிடி பிரபாகர்
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக ரூ. 23 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உடற்பயிற்சிக் கூடம் குறித்து...

எம்எல்ஏ-க்களுக்கு உடற்பயிற்சிக் கூடம் - பிரதிப் படம்
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக ரூ. 23 கோடி செலவில் உடற்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டு வருவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது, "சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் சில வசதிகளைச் செய்துதர வேண்டும் என முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.
உங்களுக்காக ரூ. 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, என்னென்ன தேவையோ தங்குதடையின்றி விரைவாகச் செய்துகொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏறத்தாழ ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
தொகுதி மக்களுக்காகக் கவலைப்படுகிற நீங்கள், உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்தி, உடற்பயிற்சிக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.
Summary
A gymnasium is being constructed at a cost of ₹23 crore to safeguard the health of MLAs, says Assembly Speaker JCD Prabhakar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



