உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மதுரை மீனாட்சி ஆசீர்வாதத்துடன்.. த்ரிஷாவின் அரசியல் போஸ்டர்களால் பரபரப்பு!

மதுரை மீனாட்சியம்மன் ஆசீர்வாதத்துடன் நடிகை த்ரிஷாவின் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்த போஸ்டர்கள் பற்றி...

அரசியல் போஸ்டர்

அரசியல் போஸ்டர் - from video grab

Published On :

மதுரை மீனாட்சியம்மன் ஆசிர்வாதத்துடன், நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே, முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்று, ராஜிநாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை த்ரிஷா போட்டியிடுவார் என்று கூறப்பட்டுவந்தது. ஆனால், அது பற்றி தவெக தரப்பில் எங்கும் உறுதியளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மதுரையில் இன்று நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்த மதுரை ரசிகர்கள், சும்மா இல்லாமல் வேலு நாச்சியாரின் உடையில் த்ரிஷா இருக்கும் படம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையின் படங்களை இணைத்து முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

சரி திடீரென ஏன் இந்த போஸ்டர் என்று கேட்டபோது வெளியான தகவல்தான் ஆச்சரியம். பிரபல நடிகையான திரிஷா அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மதுரையில் திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் நடிகை திரிஷா அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக, எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

பொதுவாக சினிமா, அரசியல் போஸ்டர்களைக் கண்டும் காணாமல் செல்லும் மக்கள், தற்போது நடிகை த்ரிஷா போஸ்டர்களை ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.

Summary

With the blessings of Madurai Meenakshi... Trisha's political posters create a stir!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.