மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் மீது மற்றொரு கார் மோதியதில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் மதுரை சென்றபோது, மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வானம் மீது மோதி, சாலையின் மறுபுறம் வந்த மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் நொறுங்கியது. இதில், காரில் இருந்த ஸ்ரீராம், அவரது மனைவி ரஞ்சனா, அவர்களது ஒன்றரை வயது குழந்தை பிரனிதா உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து மேலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Regarding the accident in which a car collided with another car on the Thumbaipatti four-lane highway near Melur, Madurai...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி!

ம.பி.யில் அணைக்குள் கார் பாய்ந்ததில் 5 பேர் பலி!

பழனி முருகன் கோயில் செல்வோர் கவனத்துக்கு! ரோப் கார் சேவை இயங்காது!

பக்தர்கள் கவனத்திற்கு.... பழனி ரோப் கார் சேவை 45 நாட்கள் இயங்காது!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




