பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்து குறித்து...

5 people killed in a car accident near Pollachi

விபத்துக்குள்ளான கார்.

Published On :

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியாகினர்.

கோவை மாட்டம், பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நல்லம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியது.

மோதிய வேகத்தில் கார் நொறுங்கியது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இடிபாடுகளில் சிக்கி பலியான நிலையில் இருந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேரின் சடலங்களை மீட்டனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்த கோமங்கலம் காவல் நிலைய போலீஸார் பலியானவர்களின் சடலங்களை மீட்டு கூராய்வுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியானவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

5 people were killed when a car crashed into a truck parked on the highway near Pollachi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.