FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புகுடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு
/

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர்

காவிரி விவகாரம் குறித்து மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு....

News image

மாணிக்கம் தாகூர் - கோப்புப்படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 3:13 pm IST

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், கர்நாடக முதலவர் டி.கே. சிவகுமார் கர்நாடகத்திற்காகத்தான் பேசுவார். அவருக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமல்ல. எனக்கு தமிழ்நாடு நலன்தான் முக்கியம். முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

தமிழ்நாடும் கர்நாடகாவும் இந்தியா - பாகிஸ்தான் கிடையாது. பேசி தீர்க்கும் நிலையை உருவாக்க வேண்டுமென முதல்வர் விஜய் நினைப்பதே பாராட்டுக்குரிய விஷயம். இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை. அரசியல் செய்வதுதான் முக்கியமாக உள்ளது. மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும். திமுக கூட்டணியை விட்டு விலகினாலும் தொகுதி மறுவரையறை பிரச்னையில் காங்கிரஸ் மாறவில்லை.

தொகுதி மறுவரையறையை எதிர்த்து முன்பு நகலை எரித்தது யார்? பட்டாசு வெடித்தது யார்?. தொகுதி மறுவரையறையில் எட்டப்பர்கள் பாஜக, அதிமுக, பாமகதான். துரோகம் செய்வோரே எட்டப்பர்கள். ராகுல் அதைத்தான் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு மிகவும் முக்கியமானது.

இது தமிழகத்துக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.

Summary

Manickam Tagore has stated that Cauvery is not important to the political parties in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.