2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டபோதிலும் எங்களிடம் தண்ணீர் இல்லை: கர்நாடக அமைச்சர்

கர்நாடகத்திலேயே போதுமான தண்ணீர் இல்லை என்று அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளது பற்றி...

Karnataka Minister Ramalinga Reddy.

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி... - கோப்புப் படம்

Published On :

கர்நாடகத்திலேயே போதுமான தண்ணீர் இல்லை என்று அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி இன்று (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் பிரச்னை குறித்து அவர் பேசியதாவது:

இந்தப் பிரச்னை தொடர்பாக 15 நாள்களுக்கு ஒருமுறை கூட்டம் நடைபெறுகிறது. 15 நாள்களுக்கு ஒருமுறை 3,500 கன அடி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழங்காற்றுக் குழு நேற்று (ஜூலை 28) உத்தரவிட்டது.

கர்நாடகத்திலேயே போதுமான தண்ணீர் இல்லை. ஹரங்கி, கபினி, கேஆர்எஸ் மற்றும் ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளிலும் சேர்த்து, நம்மிடம் வெறும் 46 டி.எம்.சி (1,000 மில்லியன் கன அடி) நீர் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு மாதமும், 10 மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 3.5 டி.எம்.சி தண்ணீர் நமக்கு தேவைப்படுகிறது.

அதனால்தான் நாங்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப் போகிறோம். அதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் எங்கள் கூடுதல் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்வார். அனைத்து விவரங்களுக்கும், நீங்கள் எங்கள் முதல்வர் டி.கே. சிவகுமாரை தொடர்பு கொள்ளலாம். இதற்கான காரணங்கள் என்ன, என்னென்ன விஷயங்கள் முடிவு செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளன என்பதை நாளை அவர் உங்களுக்குத் தெரிவிப்பார் என்று அமைச்சர் ராமலிங்க ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார், காவிரி நதிநீர் பிரச்னைக்கு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது மட்டுமே ஒரே தீர்வு எனக் கூறி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதும் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தகது.

Summary

Karnataka Minister Ramalinga Reddy has stated that there is not enough water even within Karnataka itself.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.