ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

விரைவில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறலாம் என்று அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஞாயிற்றுக்கிழமை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

News image

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி... - ENS

Updated On :5 ஜூலை 2026, 4:42 pm IST

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறலாம் என்று அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஞாயிற்றுக்கிழமை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, "இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பெரும்பாலும் மிக விரைவில் நடக்க வாய்ப்புள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக முழு அமைச்சரவையும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் தற்போதைய நிலையில், சுமார் 20 துறைகளை முதல்வர் டி.கே. சிவகுமார் கூடுதலாகக் கவனித்து வருகிறார். எனவே, இது விரைவில் நடக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் 2 ஆவது முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும், ஆட்சி அமைத்து ஒரு மாத காலத்தை நிறைவு செய்த முதல்வர் டி.கே. சிவகுமாரின் அமைச்சரவை இதுவரை நிரப்பப்படவில்லை.

அமைச்சரவையில் தற்போது முதல்வருடன் சேர்த்து 14 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். ஆனால், மாநிலத்தில் அதிகபட்சமாக 34 அமைச்சர்கள் வரை இருக்க முடியும். இதனால் அமைச்சரவை எந்த நேரத்திலும் நிரப்பப்படலாம் என்பதால் அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காக எம்.எல்.ஏ-க்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

அதிலும் எம்எல்ஏக்கள் சிலர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த அண்மையில் தில்லிக்குச் சென்றதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Karnataka Minister Ramalinga Reddy on Sunday hinted that the Cabinet expansion may take place soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.