இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

கர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!

கர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லாதது குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுக்கு டி.கே. சிவகுமார் அளித்த பதில் பற்றி...

Karnataka CM D.K. Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - படம் - ஏஎன்ஐ

Published On :

கர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு அந்த மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் வியாழக்கிழமை பதில் அளித்துள்ளார்.

கர்நாடகத்தின் முதல்வராக இருந்த சித்த ராமையா காங்கிரஸ் மேலிட உத்தரவின் பேரில், அவர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, தற்போதைய முதல்வராக டி.கே. சிவகுமார் நேற்று (ஜூன் 6) பதவியேற்றார். மேலும், அவருடன் 13 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

முதல்கட்டமாக பதவியேற்ற அமைச்சர்களில் ஒரு பெண் கூட இடம்பெறாததை பாஜக விமர்சித்திருந்தது. இது குறித்த செய்தியாளர் கேள்விக்கு டி.கே. சிவகுமார் தெரிவித்ததாவது:

நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இன்னும் நிறைய இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நாங்கள் அனைவரும் ஒன்றாக உள்ளோம். நாங்கள் பொதுமக்களுக்காக வேலை செய்கிறோமே தவிர தனிநபருக்காக அல்ல. நாங்கள் பெண்களுக்காக எத்தனை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதைப் பார்க்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளித்து ஆதரவளிப்பது எப்படி என்பதற்கு நாடு முழுவதற்குமான ஒரு முன்மாதிரியை நாங்கள் அமைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும், 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகத்தில் அதிகபட்சமாக முதல்வர் உள்பட 34 பேர் அமைச்சர்களாக அங்கம் வகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Karnataka Chief Minister D.K. Shivakumar responded on Thursday to the BJP's allegation that there is no room for women in the state cabinet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.