இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: முதல்வர் விஜய்கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்! தில்லி உணவகத்தில் தீ விபத்து: 21 பேர் பலி!
/

பெண்கள் இல்லாத கர்நாடக அமைச்சரவை!

கர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு வாய்ப்பளிக்காதது பற்றி...

News image

ராகுல் காந்தியை வரவேற்ற டி.கே. சிவகுமார் - X

Updated On :3 ஜூன் 2026, 4:58 pm IST

கர்நாடகத்தில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ள நிலையில், ஒரு பெண் எம்.எல்.ஏ.க்குகூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா கடந்த மே 28 அன்று பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக அக்கட்சியின் மேலிடம் அறிவித்தது.

இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் மாளிகையில் மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். மேலும், துணை முதல்வராக பரமேஸ்வரும், 12 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சரவையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பதவியேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் ஒரு பெண்கூட இடம்பெறாததை இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

இருப்பினும், இரண்டாம் கட்டமாக பதவியேற்கும் அமைச்சரவையில் பெண்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Karnataka Congress Cabinet Without Women!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.