தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் பற்றாக்குறை, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(ஜூலை 22) புதுதில்லியில் நடைபெறுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது . இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் சம்பா சாகுபடிக்கான நீர் திறப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால், நிகழாண்டு அணையின் நீர் இருப்பும், நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்தச் சூழலில், தில்லியில் புதன்கிழமை (ஜூலை 22) நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மைக் ஆணையக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்தும் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் கூடிய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் அளிக்க வேண்டிய நிலுவை நீரைப் பெற இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஜூலை 21) காலை 3-வது நாளாக விநாடிக்கு 42 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.70 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 36.87 டி எம் சியாக உள்ளது.
Summary
Amid the continuously widening deficit in the Cauvery water due to Tamil Nadu, a meeting of the Cauvery Water Management Authority is scheduled to be held in New Delhi tomorrow (July 22).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










