தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

22.8.1976: காவிரி பகுதிகளுக்கு பவானி சாகர் நீர் சப்ளை

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

22.8.1976 - Dinamani

Published On :

சென்னை, ஆக. 21 - காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு நீர் சப்ளை மேட்டூர் தேக்கத்திலிருந்தும், பவானிசாகர் தேக்கத்திலிருந்தும் மாறி மாறி விடப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

மேட்டூர் தேக்கத்தின் நீர் மட்டம் மிகக் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

சென்ற வியாழக்கிழமை முதல் பவானி சாகர் தேக்கத்திலிருந்தும் நீர் விடப்படுகிறது. தினசரி 10.000 கியூசெக்குகள் நீர் மேட்டூர் தேக்கத்திலிருந்தும், பவானி சாகர் தேக்கத்திலிருந்தும் மாறி மாறி விடப்படுகிறது.

இரு தேக்கங்களிலும் நீர் மட்டம் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே மாறி மாறி நீர் விடும் ஏற்பாடு இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு நீடிக்கும் என்று கருதப் படுகிறது.

மேட்டூர் தேக்கத்தின் கொள்ளளவு 120 அடி. ஆனால் இப்போது நீர்மட்டம் 37.2 அடிதான். நீர் வரத்து 2329 கியூசெக்குகள். 10 ஆயிரம் கியூசெக்குகள் நீர் வெளியில் விடப்படுகிறது.

பவானிசாகர் தேக்கத்தில் 700 கோடி கன அடி நீர் மட்டுமே உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் தேக்கத்தில் நீர் மட்டம் 118.23 அடி. 3600 கோடி கன அடி நீர் உள்ளது.

மேட்டூர் தேக்கம் கபினியிடமிருந்துதான் நீர் பெறுகிறது.

வருமான வரி வசூலை எளிதாக்க அரசு பரிசீலனை - மத்திய மந்திரி பை தகவல்

மங்களூர், ஆக 21- வருமான வரி வசூலை எளிதாக்கும் அனேக புதிய வழிகள் பற்றி அரசு பரிசீலிக்கிறது என்று மத்திய தொழிலமைச்சர் டி. ஏ. பை இன்று கூறினார்.

வரிச்சுமையை குறைப்பது தற்போதைய முயற்சி என்றார். இதற்கு முன்பு அதிக வருவாயுள்ளவர்களிடையே பெருமளவில் வரி டிமிக்கி இருந்துவந்தது என்றும், இப்போது நிலைமை மாறிவிட்டது என்றும் வருமான வரி அலுவலக நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.

ஆய்வு கமிட்டி

வருமான வரி வசூலை சீரமைக்கும் வாய்ப்பு பற்றி அறிய சமீபத்தில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். வரி செலுத்தும் பழக்கத்தை மக்களிடையே வளர்க்கும்படி வருமான வரி அதிகாரிகளை இவர் கேட்டுக் கொண்டார்.

Summary

22.8.1976: Bhavanisagar water supply to Cauvery regions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.