பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கபினி உபரிநீர் வரத்து! மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு!

கபினி உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது குறித்து...

Mettur Dam water level rises by 2 feet

மேட்டூர் அணை நீர் வரத்து 112.27 கன அடியாக அதிகரித்துள்ளது. - கோப்புப்படம்

Published On :

கபினி உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

கேரளம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கபினியின் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்குப் பிறகு நேற்று பிற்பகலில் தமிழக கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதிக்கு கபிணியின் உபரி நீர் வந்து சேர்ந்தது. இரவு 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. உபரி நீர் வரத்து காரணமாக செவ்வாய் காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 67 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இரவு 8 மணிக்கு வினாடிக்கு 4923 கனஅடியாக அதிகரித்தது. புதன்கிழமை காலை வினாடிக்கு 11,988 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து செவ்வாய் காலை 73.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 74.01அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 36.24 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Summary

Surplus water inflow from Kabini. Mettur Dam water level rises by 2 feet...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.