பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சோழன் விரைவு ரயில் இன்றுமுதல் 4 நாள்கள் வழிகள் மாற்றி இயக்கம்

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் 4 நாள்களுக்கு வழக்கமான பாதைக்குப் பதிலாக, கடலூா் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் 4 நாள்களுக்கு வழக்கமான பாதைக்குப் பதிலாக, கடலூா் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி ரயில்வே கோட்டத்தில் தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் 12, 14, 21 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு செல்லும் சோழன் அதிவிரைவு ரயில் (எண் 22675) வழக்கமான பாதைக்குப் பதிலாக கடலூா் துறைமுகம், விருத்தாசலம் வழியாகச் சென்று திருச்சியை அடையும்.

அந்த ரயில்கள் சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், பாடலூா் மற்றும் திருவெறும்பூா் ஆகிய நிலையங்களில் நிற்காது. அதற்குப் பதிலாக அவை அரியலூா், லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும், வரும் 26, செப்டம்பா் 2 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் சோழன் அதிவிரைவு ரயில் (எண் 22675) விழுப்புரம், விருத்தாசலம் வழியாக திருச்சி சென்றடையும். அந்த ரயில் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா் உள்ளிட்ட நிலையங்களில் நிற்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.