இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் குருவாயூருக்குச் செல்லும் தினசரி விரைவு ரயில் 10 நாட்கள் தாமதமாக இயக்கப்படுவது குறித்து...

News image

எழும்பூா் ரயில் நிலையம். - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:45 pm IST

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் குருவாயூருக்குச் செல்லும் தினசரி விரைவு ரயில் 10 நாட்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பு: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால் குறிப்பிட்ட விரைவு ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

வரும் 9, 10 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் குருவாயூா் விரைவுரயில் (எண்16127) வழியில் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

வரும் 11, 12 ஆகிய தேதிகளில் எழும்பூா் நிலையத்தில் புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் 45 நிமிடங்களும், வரும் 27, 31 ஆகிய தேதிகளில் அந்த விரைவு ரயில் 30 நிமிடங்களும், வரும் 28, 29 ஆகிய தேதிகள் மற்றும் செப். 1, 2 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் வழியில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டு குருவாயூரை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.