காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு; 23,200 ஐ கடந்த நிஃப்டி!!மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

சென்னை-மும்பை விரைவு ரயில் நாளை ரத்து

சென்னை எழும்பூரிலிருந்து மும்பை செல்லும் சிஎஸ்டி விரைவு ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை-திருநெல்வேலிக்கு
3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

ரயில்.

Published On :

சென்னை எழும்பூரிலிருந்து மும்பை செல்லும் சிஎஸ்டி விரைவு ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோட்டத்தில் தண்டவாள சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக குறிப்பிட்ட சில விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விரைவு ரயில்கள், வழித்தடங்கள் மாற்றி இயக்கப்படவுள்ளன.

சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) காலை 6.35 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிஎஸ்டி விரைவு ரயில் (எண்: 22158) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் மும்பை சிஎஸ்டி நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) இரவு 10.52 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூா் வரவேண்டிய விரைவு ரயிலும் (எண்: 22157) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

தாமதமாகப் புறப்படும் ரயில்: சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் (எண்:12697) திங்கள்கிழமை (ஜூலை 27) அதிகாலை 4.30 மணிக்கு, அதாவது 13.20 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.