செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

காவிரி நீர் உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! தமிழக அரசு

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் விஜய் திறந்துவைத்தது பற்றி...

We will not give up our rights to Cauvery water under any circumstances

மேட்டூர் அணை நீரை திறந்துவைத்தார் முதல்வர் விஜய். - DIN

Published On :1 செப்டம்பர் 2026, 3:45 pm IST

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவை மற்றும் 
2026-27 ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா பாசனத்திற்காக
முதல்வர் ஜோசப் விஜய் இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யவும் முதல்வர் ஜோசப் விஜய், தண்ணீரைத் திறந்து வைத்தார். 

இன்று (1.9.2026) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.452 டி.எம்.சி. ஆகவும்,  நீர்வரத்து வினாடிக்கு 10,857 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பாசனத் தேவைக்கேற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப்படுத்தப்படும்.

இதுதொடர்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய துறைகள் மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி நீரும் விவசாயிகளின் நலனுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுவது
உறுதி செய்யப்படும். காவிரி ஆறு மற்றும் கால்வாய்களின் வழித்தடங்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சுதல், அனுமதியின்றி நீர் எடுத்தல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நீரேற்றுத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நீர் எடுப்பது ஆகியவை கண்டிப்பாகத் தடுக்கப்படும்.

இதற்காக நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத் துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அலுவலர்களைக் கொண்ட கூட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு–பகலாக ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

காவிரி நீர் என்பது நடுவர்மன்றத் தீர்ப்பாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பாலும் உறுதிசெய்யப்பட்ட நமது சட்டப்பூர்வ உரிமையாகும். அந்த உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப்பெற அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தையும் அணுகி, தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும், டெல்டா விவசாயிகளின் உரிமையையும் பாதுகாப்பதற்கான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது நீர் திறப்பது, வரையறுக்கப்பட்ட நீரைச் சிக்கனமாகவும், திறம்படவும் நிர்வகித்து சம்பா சாகுபடியைப் பாதுகாப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும்.

எனவே, விவசாயிகள் குறைந்த நீர்த் தேவையுள்ள மத்திய கால நெல் இரகங்களையும், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நீர்ச் சிக்கன சாகுபடி முறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

"நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்; சம்பா சாகுபடியை வெற்றிபெறச் செய்வோம்"

இந்த நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ந. ஆனந்த், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள், நீர்வளத் துறை செயலாளர் பிரசாந்த் மு. வடநெரே, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயப் பெருங்குடிமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Summary

We will not give up our rights to Cauvery water under any circumstances: Tamil Nadu Govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.