சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

மேட்டூர் நீர் மின் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

மேட்டூர் நீர் மின் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு செய்துள்ளது பற்றி...

Chief Minister Vijay inspects Mettur Hydroelectric Power Station

மேட்டூர் நீர் மின் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு - DIPR

Updated On :

மேட்டூர் அணை நீரைத் திறந்துவைத்த முதல்வர் விஜய், மேட்டூர் நீர் மின் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று (செப். 1) தண்ணீர் திறந்துவைத்தார். இன்று முதல் 45 நாள்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதையொட்டி சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள், கட்சியினர் பலரும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காமாலபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டூருக்கு வேனில் வந்தார் முதல்வர். முதல்வர் வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வந்தடைந்த முதல்வருக்கு காவல்துறை சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவைத்த முதல்வர், பின்னர் மலர் தூவி காவிரி நீரை வரவேற்றனர். விவசாய பிரதிநிதிகளுடனும் பத்திரிகையாளர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய், மேட்டூர் அணை தொடர்பான வரலாற்றுப் புகைப்படங்களை பார்வையிட்டார்.

இதன்பின்னர் மேட்டூர் நீர் மின் நிலையத்தை ஆய்வு செய்தார். நீர் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அவரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அங்குள்ள பணியாளர்களுடனும் முதல்வர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Summary

Chief Minister Vijay inspects Mettur Hydroelectric Power Station

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.