/

ம.பி.யில் அணைக்குள் கார் பாய்ந்ததில் 5 பேர் பலி!

மத்திய பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த அணைக்குள் பாய்ந்ததில் 5 பேர் பலியாகினர்.

News image

விபத்து.

Updated On :25 ஜூலை 2026, 4:29 pm IST

மத்திய பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த அணைக்குள் பாய்ந்ததில் 5 பேர் பலியாகினர்.

மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த அணைக்குள் பாய்ந்தது.

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.

ராஜ்கர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள பில்கேடி சந்திப்புக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

அந்தக் கார் பச்சோரிலிருந்து குஜ்னரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ரவி தாக்குர் தொலைபேசி வாயிலாக பிடிஐ-யிடம் தெரிவித்தார்.

விபத்தில் பலியானவர்கள் அண்டை மாவட்டமான ஷாஜாபூரில் உள்ள ஆரண்யா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் உதவியுடன் போலீஸார் மீட்புப் பணியை மேற்கொண்டு, அணைக்குள் மூழ்கியிருந்த காரை மீட்டனர். காரில் பயணித்த 5 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டதாக தாக்குர் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறியக் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Summary

Five men were killed after their speeding car veered off the road and plunged into a roadside dam in Madhya Pradesh's Rajgarh district on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.