இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

த்ரிஷாவுக்கே இந்த நிலைமையா? ஏமாற்றமளித்த ஆன்லைன் ஷாப்பிங்!

ஆன்லைன் ஷாப்பிங் அனுபவம் பற்றிய நடிகை த்ரிஷாவின் பதிவு குறித்து...

trisha

நடிகை த்ரிஷா - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றமடைந்த ஓர் அனுபவத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல ஆடை நிறுவனத்தின் மீது நடிகை த்ரிஷா பகிரங்கமான, அதேநேரத்தில் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடிகை த்ரிஷா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்.

இன்று பிரபல ஆடை நிறுவனத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆன்லைன் மூலமாக, தான் வாங்கிய ஆடைகளில் துர்நாற்றம் வீசியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இது முதல்முறை அல்ல, தனக்கு 3 ஆவது முறையாக இப்படி நிகழ்ந்துள்ளதாகவும் அந்த ஸ்டோரியில் கூறியுள்ளார். அந்த ஆடைகளில் உடல் வியர்வை நாற்றம் இருந்ததாகவும் அது அருவருக்கத்தக்கதாக இருந்ததாகவும் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி அந்த நிறுவனத்திடம் ஒரு பணிவான கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். பணியாளர்கள் துணிகளை பேக்கிங் செய்வதற்கு முன்பாக அதனை நுகர்ந்து பார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அடுத்த முறை வீட்டுக்கு வரும் டெலிவரி பொருள்களில் லேசான துர்நாற்றம்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

Story image

ஆனால் அவர் என்னென்ன பொருள்கள் ஆர்டர் செய்தார் என்ற விவரங்களைக் குறிப்பிடவில்லை.

நடிகை த்ரிஷாவின் இந்த ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து நடிகை த்ரிஷாவுக்கே ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றமா? என நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வரும் தன்னுடைய நண்பருமான ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி, அவருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Summary

Even Trisha faced this situation, Online shopping that caused disappointment!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.