FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

லாலு பிரசாத் யாதவ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பாக..

News image

லாலு பிரசாத் உடல்நிலை மோசமடைந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் - file photo

Updated On :18 ஜூலை 2026, 12:14 pm IST

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவச் சிகிச்சைக்காகத் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரவது மூத்த மகள் மிசா பாரதி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் அவரது உடல்நிலையை விரிவாகப் பரிசோதனை செய்தனர். பின்னர், அவரது உடல்நிலை சீரானதையடுத்து அவர் மருத்துவமனையில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, மேலதிக மருத்துவச் சிகிச்சைக்காக அவர் சனிக்கிழமையன்று காலை தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மிசா பாரதி செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

ஆர்ஜேடி தலைவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

தில்லிக்குச் செல்வதற்கு முன், அவர் வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆர்ஜேடி தலைவர் சமீபத்தில் குடியேறிய கௌடில்யா நகர் பகுதியில் கடுமையான சுகாதாரச் சீர்கேடு பிரச்னைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கௌடில்யா நகரில் சுகாதாரம் பெரிய பிரச்னையாக உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது கணவர் லாலு பிரசாத் ஆகியோர், பாட்னாவில் உள்ள 10 சர்குலர் சாலையிலிருந்த அரசு பங்களாவிலிருந்து, கௌடில்ய நகரில் உள்ள தங்கள் சொந்த வீட்டிற்குச் சமீபத்தில் குடிபெயர்ந்தனர்.

10 சர்குலர் சாலையில் உள்ள பங்களா பிகாரின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத் துறை அமைச்சரான நந்த் கிஷோர் ராமுக்கு ஒதுக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக ஆர்ஜேடி தலைவர் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். அவர் டிசம்பர் 2022-இல் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RJD supremo Lalu Prasad will be taken to AIIMS, Delhi, on Saturday for medical treatment, according to his eldest daughter Misa Bharti.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.