நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தையைத் தொடந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எனினும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி அறிவித்துள்ளது.
சிஜேபிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னையிலும் தொடர்ந்து 3 ஆவது நாளாக மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை லயோலா கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரிகளில் மாணவர் அமைப்பின் சார்பில் மாணவர்கள் கருப்பு உடை அணிந்து நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதேபோல தமிழகத்தில் திருநெல்வேலி, திருப்பூர், கும்பகோணம் என பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராடிய மாணவர்களை காவல்துறை கைது செய்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததும், மாணவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Students massive protest in chennai against NEET Exam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்கள் தாக்கப்படும் விடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா? - பா. ரஞ்சித் கேள்வி!
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்! வெற்றிமாறன், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக தனிக் கச்சேரி!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



