நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மலை கிராம மாணவி தனது மருத்துவப் படிப்புக்கு அண்ணன் முதல்வர் விஜய் உதவ வேண்டும் என்று மலைவாழ் மாணவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளிக்கு வந்து படிப்பதற்கே பல போராட்டங்களை சந்தித்து வரும் மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவிகள் தனக்கென ஒரு தனித்துவத்தை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நாடே பெரும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கப்பட்ட நீட் மறுதேர்வில் வெற்றி பெற்று ஏற்காடு மலைவாழ் மாணவி சாதனை படைத்துள்ளார்.
நடப்பதற்கு பாதை இல்லை, குடிப்பதற்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை, காலில் செருப்பு இல்லை, நேரத்துக்கு உணவில்லை என்ற பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் படிப்பு ஒன்று தான் வாழ்க்கையின் முக்கியம் என்று கருதிய சேலம் மாவட்டம் ஏற்காடு குண்டூர் பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற மாணவி நடைபெற்று முடிந்த நீட் மறுதேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

மதிப்பெண்கள் பெற்றது குறைவாக இருந்தாலும் மருத்துவப் படிவு என்பது இவரது லட்சியமாக உள்ளது. இவருக்கு தற்போதைய சூழ்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத சூழல் நிலவுவதால் தனியார் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோன்று தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் அந்த அளவிற்கு பணத்தைக் கொட்டி படிப்பதற்கு இவரது பெற்றோர்களுக்கு பணமோ, பின்புலமோ இல்லை. அன்றாட வயிற்று பிழைப்புக்காக கூலி வேலைக்குச் செல்லும் இவரது பெற்றோர்கள் இவரை படிக்க வைப்பதற்கே பெரும் சிரமம்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான மறுநீட் தேர்வில் முடிவில் வெற்றி பெற்றுள்ள நிவேதா, மருத்துவர் கனவுடன் இருக்கும் தனக்கு அண்ணன் முதல்வர் விஜய் உதவ வேண்டும். தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கருதி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று மாணவி நிவேதா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக பல லட்சங்களை கொட்டி தேர்ச்சி பெற்று விட்டோம் என்று மார்த்தட்டிக் கொள்ளும் மாணவர்களுக்கிடையே ஏதோ மலை கிராம மூலையில் இருந்து தனக்கு ஏற்ற திறமையை வளர்த்துக் கொண்டு படித்து வெற்றி பெற்ற இவரது படிப்புக்கு அனைவரும் உதவ முன் வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
செல்வமும், நல்ல மனமும் கொண்டவர்கள் நிச்சயமாக உதவ முன்வருவார்கள்... !
Summary
Tribal student clears NEET... Student makes emotional appeal for Chief Minister Vijay's help to pursue medicine
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










