டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!

சென்செக்ஸ் 455.59 புள்ளிகள் சரிந்து 78,499.17 புள்ளிகளாகவும், நிஃப்டி 65.35 புள்ளிகள் சரிந்து 24,570.65 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 5:28 pm IST

மும்பை: கடந்த இரண்டு நாட்களாக ஏற்றம் கண்டிருந்த பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இன்றைய வர்த்தகத்தில், சரிவுடன் நிறைவடைந்தன. வங்கி மற்றும் நிதித்துறைப் பங்குகளின் சரிவு மற்றும் கச்சா எண்ணெயின் விலை 80 டாலருக்கும் அதிகமாக வர்த்தகமானதால் இந்தச் சரிவுக்கு இதுவே காரணமாக அமைந்தது.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 455.59 புள்ளிகள் சரிந்து 78,499.17 புள்ளிகளாகவும், வர்த்தகத்தின் இடையே 577.69 புள்ளிகள் சரிந்து 78,377.07 புள்ளிகள் வரை சென்றது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி, வர்த்தகத்தின் இடையே இது 113.25 புள்ளிகள் சரிந்து 24,522.75 புள்ளிகள் வரை சென்ற நிலையில், வர்த்தக முடிவில் 65.35 புள்ளிகள் சரிந்து 24,570.65 புள்ளிகளாக நிலைபெற்றது.

நிறுவனங்களின் வருவாய் முடிவுகள் சாதகமாக இருந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிதித்துறைப் பங்குகளில் காணப்பட்ட பலவீனம் ஆகியவற்றால், இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தன.

சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் பஜாஜ் ஃபைனான்ஸ் 5.90 சதவீதமும், பஜாஜ் ஃபின்சர்வ் 4.18 சதவீதமும் சரிந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி, ட்ரெண்ட், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளும் சரிந்தன.

பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்களைக் கொண்ட பங்குகளுக்குப் இந்திய பங்குச் சந்தையில் புதிய ஏல முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, வார முழுவதும் இவ்விரு முக்கியக் குறியீடுகளும் மாறுபட்ட போக்கை வெளிப்படுத்தின. பங்கு ரொக்கப் பிரிவில் இறுதி ஏல அமர்வு திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இது, விலை நிர்ணய செயல்முறையை மேலும் வெளிப்படையானதாகவும் வலுவானதாகவும் மாற்றும் நோக்கில், தகுதியான பங்குகளின் இறுதி விலையை நிர்ணயிப்பதற்கான ஒரு புதிய ஏல அடிப்படையிலான வழிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு உயர்வுடன் வர்த்தகமானது.

ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமையன்று) 17.86 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.35 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 82.20 டாலராக உள்ளது.

Summary

Market benchmark indices Sensex and Nifty ended lower on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.