முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

வேர்ல்பூல் இந்தியா நிகர லாபம் 29.5% சரிவு!

வேர்ல்பூல் இந்தியா, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29.57% சரிந்து ரூ. 102.88 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2026, 8:08 pm IST

புதுதில்லி: நுகர்வோர் சாதனங்களைத் தயாரிக்கும் வேர்ல்பூல் இந்தியா லிமிடெட், 2027 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29.57% சரிந்து ரூ. 102.88 கோடியாக இருப்பதாக நிறுவனம் இன்று அறிவித்தது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ. 146.08 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.

இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்த வேர்ல்பூல் கார்ப்பரேஷனின் இந்திய துணை நிறுவனமான வேர்ல்பூல் இந்தியா, ஆய்வுக்கு உட்பட்ட காலாண்டில் செயல்பாட்டு வருவாயில் 12.1% வளர்ச்சியைப் பதிவு செய்தது. நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,432.32 கோடியிலிருந்து ரூ. 2,726.75 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜூன் வரையான காலாண்டில் வேர்ல்பூல் இந்தியா-வின் மொத்தச் செலவு 16% அதிகரித்து ரூ. 2,656.89 கோடியாகயும், நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வருமானம் 12.43% அதிகரித்து ரூ. 2,795.64 கோடியாக உள்ளது.

இதற்கிடையில், மற்றொரு அறிவிப்பில், நிறுவனத்தின் முக்கிய துணை நிறுவனமான வேர்ல்பூல் இந்தியா கிச்சன் அப்ளையன்சஸ் லிமிடெட், சேவைப் பிரிவுத் தலைவரான அனிஷ் அஹுஜா, தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக செப்டம்பர் 1, 2026 முதல் பொறுப்பேற்பார் என்று வேர்ல்பூல் இந்தியா தெரிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில், வேர்ல்பூல் இந்திய பங்குகள் 1.7% சரிந்து, ஒரு பங்கின் விலை ரூ. 806.65 ஆக நிறைவடைந்தது.

Summary

Whirlpool of India Ltd reported a 29.57 per cent decline in its consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.