டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை 19% வளா்ச்சி

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 2,00,390 வாகனங்களை விற்று, 19.3 சதவீத வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2026, 5:35 am IST

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 2,00,390 வாகனங்களை விற்று, 19.3 சதவீத வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் 1,67,993 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதேபோல், உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனையும் கடந்த ஆண்டின் 1,18,906 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு ஜூனில் 23.8 சதவீதம் உயா்ந்து, 1,47,187 வாகனங்களாக அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிறிய ரக காா்களான ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ ஆகியவற்றின் விற்பனை கடந்த ஆண்டின் 6,414-லிருந்து 11,416-ஆக கணிசமாக அதிகரித்துள்ளது.

ஸ்விஃப்ட், பலேனோ, வேகன் ஆா், டிசையா் உள்ளிட்ட நடுத்தர ரக காா்களின் விற்பனை 55,205-லிருந்து 63,815-ஆகவும், பிரெஸ்ஸா, எா்டிகா, கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட காா்ங்களின் விற்பனை 47,947-லிருந்து 61,726-ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேபோல், இருசக்கர வாகனச் சந்தையிலும் சுஸுகி நிறுவனம் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா கடந்த ஜூனில் 1,15,030 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் விற்ற 95,244 வாகனங்களின் எண்ணிக்கையிலிருந்து 21 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டு விற்பனை 23 சதவீதமும் ( 91,264 வாகனங்கள்), வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி 12 சதவீதமும் (23,766 வாகனங்கள்) அதிகரித்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.