புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, ஜூலை மாதத்தில் 2,48,845 வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33% வளர்ச்சியாகும்.
மாருதி சுஸுகி இந்தியா, ஜூலை 2025ல் 1,87,073 வாகனங்களை உற்பத்தி செய்தது. இதுவே நடப்பாண்டின் மார்ச் 2026ல் நிறுவனம் 2,31,933 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதனை அளவிலான உற்பத்தி இருந்தபோதிலும், ஜூலை மாதத்தில் 1.78 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதால், டீலர்களிடம் உள்ள இருப்பு சராசரியை விட மிகக் குறைவாகவே இருந்ததாக மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு மூத்த நிர்வாக அதிகாரியான பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார்.
அதே வேளையில், டீலர் நெட்வொர்க்கில் இருப்பு வெறும் 16 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்று தெரிவித்த அவர், சுமார் 1.6 லட்சம் வாகனங்களுக்கான முன்பதிவுகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டுச் சந்தையில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனையிலும் சாதனை படைத்துள்ள மாருதி சுஸுகி இந்தியா, கடந்த மாதம் 1,96,203 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விற்பனையான 1,37,776 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 43% வளர்ச்சியாகும்.
இலகுரக வணிக வாகனங்கள் உட்பட மொத்த உள்நாட்டு விற்பனை 2,00,123 வாகனங்களாக உயர்ந்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ஆல்டோ ஆகிய மாடல்களில் மொத்தம் 13,964 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் 11,484 வாகனங்கள் உற்பத்தி செய்தது.
பலேனோ, செலிரியோ மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய சிறிய ரக கார்களின் உற்பத்தி கடந்த மாதம் 1,13,067 வாகனங்களாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்த 87,950 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 29% வளர்ச்சியாகும்.
பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 70,241 வாகனங்களாக இருந்தது. கடந்த மாதம் இது 1,02,787 வாகனங்களாக உயர்ந்துள்ளது. இது 46 சதவீத வளர்ச்சியாகும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 13,610 வாகனங்களாக இருந்த ஈக்கோ வேன்களின் உற்பத்தி, கடந்த மாதம் 14,627 வாகனங்களாக உயர்ந்துள்ளது. சூப்பர் கேரி எனும் வணிக வாகனத்தின் உற்பத்தியும், கடந்த ஆண்டின் இதே மாதத்திலிருந்த 3,788 வாகனங்களிலிருந்து 4,400 வாகனங்களாக அதிகரித்துள்ளது.
Summary
Maruti Suzuki India has reported its highest-ever monthly production at 2,48,845 units in July.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு நிதியாண்டில் 9 லட்சம் சிஎன்ஜி காா்கள் விற்பனைக்கு இலக்கு

9 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய மாருதி சுஸுகி இலக்கு!

ஆகஸ்ட் முதல் மாருதி கார்களின் விலை ரூ.30,000 வரை அதிகரிப்பு!

ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை 19% வளா்ச்சி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




