மாணவர்கள் மீது தடியடி நடத்துவதும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதும்தான் ஜனநாயகமா? என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 20) கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்வு வினாத்தாள்களை கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதாகவும், நியாயமான பிரச்னைகளை எழுப்பும் மாணவர்களோ கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு, தாக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக விடியோ வெளியிட்டு ராகுல் காந்தி பேசியதாவது:
''இந்தியா அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்டுள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு எதிரான தலைவராக உள்ளார்.
கல்வித் துறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என இளைஞர்கள் போராடுகிறார்கள். உரிமைகளுக்காக போராடும் இளைஞர்கள் மீது தடியடி நடத்துவதும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதும்தான் ஜனநாயகமா?
மாணவர்களின், இளைஞர்களின் கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்களின் கோரிக்கைகளை மதிக்க வேண்டும். ஆனால் மோடி இளைஞர்களை அவமதிக்கிறார். இந்திய இறையாண்மைக்கு எதிரான கொள்கை உடைய கட்சியால் இவை நடக்கின்றன.
152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன; இதனால், 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகள் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. தண்டனை யாருக்குக் கிடைத்தது? கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்குத்தான்.
மேலும், இந்த மாணவர்கள் கல்வி குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியபோது, அதற்குப் பதிலடியாக அவர்கள் தடியடிகளையும், சிறைக்காவலையும் எதிர்கொண்டனர்.
ஆவணங்களைக் கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். நியாயமான பிரச்னைகளை எழுப்பும் மாணவர்களோ இழுத்துச் செல்லப்பட்டு, தாக்கப்படுகிறார்கள்.
இந்த அரசாங்கம் இளைஞர்களைக் கைவிடுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாய்ந்து பிடிக்கவும் செய்கிறது'' என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
पà¥à¤°à¤§à¤¾à¤¨à¤®à¤à¤¤à¥à¤°à¥ मà¥à¤¦à¥ à¤à¤¾à¤°à¤¤ à¤à¥ à¤à¤¤à¤¿à¤¹à¤¾à¤¸ à¤à¥ सबसॠयà¥à¤µà¤¾-विरà¥à¤§à¥ पà¥à¤°à¤§à¤¾à¤¨à¤®à¤à¤¤à¥à¤°à¥ हà¥à¤ - à¤à¤¤à¤¨à¥ यà¥à¤µà¤¾ विरà¥à¤§à¥ à¤à¤¿ à¤à¤ नाà¤à¤¾à¤® शिà¤à¥à¤·à¤¾ मà¤à¤¤à¥à¤°à¥ धरà¥à¤®à¥à¤à¤¦à¥à¤° पà¥à¤°à¤§à¤¾à¤¨ à¤à¤¾ à¤à¤¸à¥à¤¤à¥à¤«à¤¾ à¤à¥ नहà¥à¤ लॠसà¤à¤¤à¥à¥¤
— Rahul Gandhi (@RahulGandhi) July 20, 2026
152 पà¥à¤ªà¤° लà¥à¤à¥¤ 7.5 à¤à¤°à¥à¤¡à¤¼ à¤à¤¾à¤¤à¥à¤° पà¥à¤¡à¤¼à¤¿à¤¤à¥¤ à¤à¤° सà¤à¤¼à¤¾ à¤à¤ दà¥à¤·à¥ à¤à¥ à¤à¥ नहà¥à¤à¥¤ सà¤à¤¾ à¤à¤¿à¤¸à¥ मिलà¥? मà¥à¤¹à¤¨à¤¤à¥ यà¥à¤µà¤¾à¤à¤ à¤à¥à¥¤
à¤à¤° à¤à¤¬ à¤à¤¨ बà¤à¥à¤à¥à¤ नà¥â¦ pic.twitter.com/DbX5L4Iq5C
Summary
Is lathi charging students democracy Rahul questions Prime Minister Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜந்தர் மந்தரிலிருந்து சோனம் வாங்சுக்கை வெளியேற்றியது தவறு! - ராகுல் காந்தி
கட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகளின்போது பலியான தொண்டரின் குடும்பத்தினரைச் சந்தித்து ராகுல் ஆறுதல்

ராகுல் காந்தி மீது கூட்டணிக் கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை: பாஜக








