டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

விஜய்யை அடுத்த பிரதமர் எனக் கூறுவதை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை: காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தது குறித்து...

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:21 pm IST

முதல்வர் விஜய்யை, அடுத்த பிரதமர் என்று தொண்டர்களின் முழக்கங்களை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை; என்னைக்கூடத்தான் பிரதமர் என முழக்கமிடுகிறார்கள்; அமைச்சர்களை நான் தொண்டர்களாகத்தான் பார்க்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்தியின் 139-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை சிம்மக்கலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், மாற்றுக்கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களுக்கு, லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற துண்டுகளை அணிவித்து வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்ததாவது:

தமிழக முதல்வர் விஜய்யை, அமைச்சர்கள் வருங்கால பிரதமர் எனப் பேசிவருவது குறித்த கேள்விக்கு :-

”தொண்டர்கள் வரும்போது என்னையும் பிரதமர், மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என முழக்கமிடுகிறார்கள், அதை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை.

ராகுல்காந்திதான் எதிர்க்கட்சிகளின் முகம், தமிழகத்தில் இந்த ஆட்சி அமைய முதலில் ஆதரவு தந்தது காங்கிரஸ் கட்சிதான்.

தொண்டர்களின் முழக்கங்களுக்கு பதில்சொல்ல ஆரம்பித்தால், பதில் சொல்லிக்கொண்டே இருக்கலாம்; தவெக அமைச்சர்களை நான் தொண்டர்களாகத்தான் நினைக்கிறேன்” என்றார்

எம்எல்ஏக்களுக்கு கார் அறிவிப்பு குறித்த கேள்விக்கு?

”ஊழல் செய்யாத, லஞ்சம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர் வேண்டுமென்றால், அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதுதான் சரியானது.

புதிய தொடக்கத்திற்கு, அதற்குரிய வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Summary

Tamil Nadu Congress Committee President Manickam Tagore has stated that there is no need to attach too much importance to party cadres hailing Vijay as 'Prime Minister'; noting that even he is sometimes addressed as 'Prime Minister' by supporters, he added that he views ministers simply as party cadres.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.