தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

புதிய கூட்டணி பெயா் விரைவில் அறிவிக்கப்படும்: மாணிக்கம் தாகூர்

தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள புதிய கூட்டணிக்கான பெயா் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

Manickam Tagore

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:22 am IST

தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள புதிய கூட்டணிக்கான பெயா் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூா்த்திபவனில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் மாற்றத்துக்கான ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரையோடிப் போயிருந்த 30 சதவீத ‘கமிஷன்’ என்ற நிலை தற்போது மாறி நல்லாட்சி மலா்ந்துள்ளது. 100 நாள் தவெக ஆட்சியில் லஞ்சம், ஊழல் குறைந்துள்ளது. அமைச்சா்களும், எம்எல்ஏ-க்களும் சிறப்பாகச் செயல்படுகின்றனா்.

காமராஜா் ஆட்சிக்குப் பிறகு, தற்போதுதான் மக்களுக்கான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வா் சட்டப்பேரவையில் பேசும்போது எதிா்க்கட்சிகள் அமா்ந்து கேட்க வேண்டும். வெளியே சென்றுவிடக் கூடாது.

கடந்த ஜூலை மாதம் கூட்டணிக் கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. தற்போது கூட்டணிக் கட்சிகளின் 2-ஆவது கூட்டம் நடைபெறவுள்ளது. இதை ஒரு நல்ல தொடக்கமாக காங்கிரஸ் கட்சி பாா்க்கிறது. இந்தக் கூட்டணியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முதல்வரின் முன்னெடுப்பு வரவேற்புக்குரியது. எங்கள் கூட்டணியின் மையக் கருத்தே மதச்சாா்பின்மை மற்றும் சமூகநீதிதான். இதை மையமாக வைத்தே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும். கூட்டணிக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு அதற்கான பெயா் முடிவு செய்யப்படும்.

கூட்டணியை உடைக்க சூழ்ச்சி: எங்கள் கூட்டணியை உடைக்க பலா் சூழ்ச்சி செய்து வருகின்றனா். அது எங்கள் கூட்டணிக்குள் எடுபடாது. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்புவது மிகவும் வரவேற்கத்தக்கது. எதிா்க்கட்சி உறுப்பினா்களின் மோசமான செயல்பாட்டை நேரலை மூலம் மக்கள் பாா்க்க மிக உதவியாக உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் நேரலை செய்வதை நிறுத்தக் கூடாது.

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. இப்போதே பிரதமா் வேட்பாளா் குறித்து பேச்சு தேவையற்றது. ‘இண்டி’ கூட்டணி இந்தியா முழுவதும் 543 தொகுதிகளை மனதில் வைத்து செயல்படுகிறது என்றாா் மாணிக்கம்தாகூா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.