மாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுகிராண்ட் செஸ் டூர் தொடரை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்துசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுநாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்புசென்னை புழல் சிறைக்குச் சென்றார் முதல்வர் விஜய்! அமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல! உயர் நீதின்றம் கண்டனம்!!திமுகவில் 77-லிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிப்பு! சென்னையில் 10 மாவட்டங்கள்!திபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!தேர்தல் வழக்குகள்! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு!நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்

தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொள்வார்: மாணிக்கம் தாகூர்

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தாயகம் திரும்பி வருவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் விஜய் எடுப்பார் என மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது...

Chief Minister Vijay, Manickam Tagore

முதல்வர் விஜய், மாணிக்கம் தாகூர் - கோப்புப்ம் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:25 pm IST

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அவர்கள் தாயகம் திரும்பி வர அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதல்வர் விஜய் மேற்கொள்வார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில்,

வரலாறு காணாத வகையில் நேபாள நாட்டில் பனிப்பாறை சரிவு ஏற்படுத்திய பெருவெள்ளத்தில் சிக்கி 392 பேர் பலியாகி இருக்கிறார்கள். 800 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 910 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களை மீட்கின்ற பணியில் இந்திய வெளியுறவுத்துறை, நேபாள அரசோடும், காத்மாண்டில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடனும் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்காக தமிழ்நாட்டிலிருந்து 103 தமிழர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில் 54 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவதற்கு காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணப் பெருவெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதோடு, எஞ்சியிருக்கிற குறிப்பாக, தமிழர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலல்வர் சி. ஜோசப் விஜய் தனது அமைச்சரவை மூலமாக துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்மூலம் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது.

இத்தகைய துயரமான நேரத்தில் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு இருக்கிறது. தமிழர்களை மீட்க வேண்டிய கூடுதல் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அவர்கள் தாயகம் திரும்பி வர அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதல்வர் விஜய் மேற்கொள்வார் என கூறியுள்ளார்.

Summary

CM Vijay will take measures to rescue Tamils says Manickam Tagore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.