கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

பிரதமர் வேட்பாளர்? முதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!

முதல்வர் விஜய் - காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் சந்திப்பு பற்றி...

Chief Minister Vijay | Tamil Nadu Congress President Manickam Tagore

முதல்வர் விஜய் | தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யை காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் சந்தித்துப் பேசினார்.

வரும் 2029 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று தவெகவின் சமூக வலைத்தள மீம்ஸ்கள் வெளியாகி விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.

இதனிடையே, அடுத்த பிரதமர் யார்? என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் முதல்வர் விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார், ”வருகிற 2029ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தியே அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்றுக்கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் தவெக அரசில் அமைச்சர் பதவியில் நீடிக்க மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யோ, அல்லது மூத்த நிர்வாகிகளோ சமூக ஊடகங்களில் உலாவும் செய்தியை மறுத்தோ, விளக்கம் அளித்தோ எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யை காங்கிரஸ் மாநில கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவருடன் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி பிரவீண் சக்கரவர்த்தியும் முதல்வரை சந்தித்தார்.

Summary

Prime Ministerial candidate? Manickam Tagore meets Chief Minister-to-be Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.