தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

விஜய் பிரதமரானால், எனக்கு மத்திய அமைச்சர் பதவியா? என்ன சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?

முதல்வர் விஜய் பிரதமராவது குறித்து மாணிக்கம் தாகூர் கூறியது பற்றி...

Chief Minister Vijay | Tamil Nadu Congress President Manickam Tagore

முதல்வர் விஜய் | தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :

முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என அமைச்சர்கள் சிலர் சட்டப்பேரவையில் பேசினர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, "விஜய் பிரதமரானால் நானும் மத்திய அமைச்சராகி விடுவேன் என காங்கிரஸ் தொண்டர்களும்தான் கூறுகின்றனர். இதையெல்லாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ராகுல் காந்திதான், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் முகம். தமிழகத்தில் இந்தக் கூட்டணியின் முகம் விஜய். தவெக ஆட்சியமைக்க முதல் ஆதரவை வழங்கியது காங்கிரஸ் கட்சிதான்.

ஆகையால், தொண்டர்களின் விமர்சனங்களையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருந்து வருகிறார். இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர் சட்டப்பேரவையில் கூறினார். தவெகவும் காங்கிரஸும் கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார்.

Summary

Is CM Vijay becoming Prime Minister? Congress Chief Manickam Tagore responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.