
4 மாதங்களில் 22 மரண தண்டனை! ஒரு நீதிபதியால் 100 கொலை வழக்குகள் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்
உத்தர பிரதேசத்தில் 4 மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து...
நீதிபதி ரவிகுமார் திவாகர் - கோப்புப் படம்
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் 4 மாதங்களில் 10 வழக்குகளில் 22 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, மற்றைய 100 கொலை வழக்குகளை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் மரண தண்டனை குறித்த ஆண்டு அறிக்கையின்படி, 2025-ல் 20 வழக்குகளில் 28 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், நீதிபதி ரவிகுமார் திவாகர் தலைமையிலான முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 4 மாதங்களிலேயே 10 கொலை வழக்குகளில் 22 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதனால், இந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகளில் மரண தண்டனை விதிக்கக் கூடும் என்ற அச்சம் வழக்குரைஞர்களிடையே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மரண தண்டனைகள் உடனடியாக அமல்படுத்தக் கூடியவை அல்ல. இந்திய சட்டத்தின்படி, அமர்வு நீதிமன்றத்தால் விதிக்கப்படும் மரண தண்டனையானது, உறுதி செய்யப்படுவதற்காக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மரண தண்டனை மிகவும் அரிதாக விதிவிலக்கான வழக்குகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், திவாகர் தலைமையிலான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமார் 100 கொலை வழக்குகளை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாக உத்தரவின் பேரில் இந்த கொலை வழக்குகள் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
Summary
In 4 months, UP judge Ravi Kumar Diwakar sentences 22 to death
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


சற்று வலி குறைவான.. தூக்கு தண்டனை முறையை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! - ஐ.நா. தகவலால் அதிர்ச்சி!



