சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா தொடக்கப்புள்ளி மட்டுமே! காந்தி நினைவிடத்தில் சோனம் வாங்சுக் பேச்சு

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா என்பது தொடக்கப்புள்ளி மட்டுமே என சோனம் வாங்சுக் பேசியது பற்றி...

News image

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் சோனம் வாங்சுக் மற்றும் அவரது மனைவி. - படம் - எக்ஸ்

Updated On :27 ஜூலை 2026, 4:38 pm IST

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா என்பது தொடக்கப்புள்ளி மட்டுமே என சோனம் வாங்சுக் திங்கள்கிழமை (ஜூலை 27) தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தப் போராட்டக் களத்தில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தில்லி காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும், தனது உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்த சோனம் வாங்சுக் 26 வது நாளில் அதனை முடித்துக் கொண்டார். இதையடுத்து, மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் கடந்த சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, சிஜேபி தனது போராட்டத்தை திரும்பப் பெற்றது.

இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனம் வாங்சுக் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் சோனம் வாங்சுக் பேசியதாவது:

இந்த ராஜிநாமா அர்த்தமுள்ளதாக மாறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அப்படி மாறவில்லையென்றால், இந்த ராஜிநாமா முக்கியத்துவமற்றதாக அமையும். இது தொடக்கப்புள்ளி மட்டுமே. நமது நாட்டின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இதனால் நாடு மேலும் மேம்படும்.

இதற்கான செயல்முறை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக நான் நம்புகிறேன். இதுதொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர மரியாதையால் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டால் மிகவும் சிறப்பானதாக அமையும் என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

Summary

Sonam Wangchuk stated on Monday (July 27) that Dharmendra Pradhan's resignation is merely the starting point.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.