FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சோனம் வாங்சுக் டிஸ்சார்ஜ்! முதலில் எங்கு செல்கிறார் தெரியுமா?

மருத்துவமனையிலிருந்து சோனம் வாங்சுக் வீடு திரும்புவது பற்றி...

News image

சோனம் வாங்சுக் - x

Updated On :27 ஜூலை 2026, 1:30 pm IST

ஹரியாணாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தில்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி கட்சியின் (சிஜேபி) சார்பில் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கிய மிகப்பெரிய போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது.

இதனிடையே சிஜேபிக்கு ஆதரவாக ஜூன் 28 முதல் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 26 நாள்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்து, சிஜேபியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

இதனிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, சிஜேபி தனது போராட்டத்தை திரும்பப் பெற்றது.

இந்த நிலையில், ஹரியாணா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக சோனம் வாங்சுக் விடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

“இறுதியாக, நான் இந்த மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நாள் வந்துவிட்டது. இப்போது நான் மிகவும் நலமாக உணர்கிறேன். படிப்படியாக உணவு உட்கொண்டு, எனது உடல் வலிமையையும் மீட்டெடுத்து வருகிறேன்.

இங்கிருந்து புறப்பட்டு எனது சொந்த ஊரான லடாக்கை அடைவதற்கு முன்னதாக, நான் ராஜ்காட் சென்று காந்திக்கு அஞ்சலி செலுத்தவுள்ளேன்.

உங்கள் குரலை எழுப்பி, ஒரு இயக்கத்தை முன்னெடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாம் வெற்றி பெற்றுவிட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Sonam Wangchuk discharged! Do you know where he is going first?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.