மும்பை: டாலர் குறியீடு தனது சமீபத்திய 15 மாத உச்ச நிலையிலிருந்து சரிந்ததாலும், உள்நாட்டு பங்குச் சந்தைகளின் நேர்மறையான போக்கு உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ. 95.21 ஆக நிலைபெற்றது.
டாலர் குறியீடு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதிலும், இறக்குமதியாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து டாலருக்கான வலுவான தேவை இருப்பது, ரூபாயின் மீட்சியை தடுப்பதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.20 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தக நேரத்தின்போது இது ரூ. 95.16 முதல் ரூ. 95.35 வரையிலான வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், முந்தைய நாள் நிறைவு நிலையிலிருந்து 14 காசுகள் உயர்ந்து ரூபாய் மதிப்பு ரூ. 95.21 ஆக நிறைவடைந்தது.
முன்னதாக வியாழக்கிழமையன்று, 19 காசுகள் சரிவுடன் ரூ. 95.35 ஆக நிறைவடைந்தது.
Summary
The rupee appreciated 14 paise to close at 95.21 against the US dollar on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.54! 9 காசுகள் சரிவு!!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.53! 5 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.71! 47 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.36! 25 காசுகள் உயர்வு!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




