மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட தீவிரமான கொள்முதல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவையால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில், 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவடைந்தன. இதன் மூலம் தொடர்ந்து 4 வது வர்த்தக நாளாக ரூபாய் மதிப்பு உயர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன ரூபாய் மதிப்பு ரூ. 95.70 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கிய, ஒரு கட்டத்தில் ரூ. 95.80 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது. பிறகு ரூ. 95.48 என்ற அதிகபட்ச அளவை எட்டிய நிலையில், வர்த்தக முடிவில் அதன் முந்தைய நாள் நிலையை விட 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிலைபெற்றது.
தொடர்ந்து இரண்டு முந்தைய வர்த்தக அமர்வுகளில் 74 காசுகள் வரை உயர்ந்திருந்த நிலையில், நேற்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் அதிகரித்து ரூ. 95.82 ஆக நிலைபெற்றது.
Summary
The rupee rose 16 paise to 95.66 against dollar on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த முதல்வர் விஜய்! | CMRL | TVK

கட்டா குஸ்தி - 2! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 31 - ஆகஸ்ட் 6)

வந்துவிட்டது பாத்திரங்களைத் தேய்க்கும் ஸ்கிரப் துணி! விலையோ மலிவு!

சிவாஜி பேரன் நடித்த லெனின் பாண்டியன் புதிய வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |




