தில்லியில் போராடும் இளைஞர்களுக்காக மும்பையைச் சேரந்த நபர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ததாக டெலிவரி ஊழியர் ஒருவர் பேசிய விடியோ வைரலாகி வருகிறது.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கடந்த ஜூன் 20 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தொடங்கிய போராட்டம் நேற்று முதல் தீவிரமடைந்துள்ளது.
போராட்ட களமான ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் நேற்று தடியடி நடத்தினர். மேலும், நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் உள்பட மாணவர்கள் பலரும் காயமடைந்தனர். இந்த நிலையிலும் இளைஞர்கள் தங்களுடைய போரட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்ட களத்தில் பங்கேற்க முடியாதவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்களது ஆதரவுகளைத் தெரிவிப்பது அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய முயல்வது என மறைமுகமாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கொட்டும் மழையில் ஸொமேட்டோ ஊழியர் ஒருவர் பெரிய உணவுப் பைகளுடன் போராட்ட களமான ஜந்தர் மந்தரினுள் நேற்று நுழைந்துள்ளார். “பசியில் போராடும் இளைஞர்களுக்காக மும்பையைச்சேர்ந்த நபர் ஒருவர் உணவு ஆர்டர் செய்திருப்பதாகவும் அந்த உணவை இலவசமாக அவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டதாகவும்” அந்த டெலிவரி ஊழியர், பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை நிகழ்த்திய அந்த நபரை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
A video of a delivery worker speaking about a Mumbai resident who ordered food online for the protesting youth in Delhi is going viral.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









