சோனம் வாங்சுக் உடல்நிலை மீது அரசைவிட எங்களுக்கு அதிக அக்கறை உண்டு என அவரது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ இன்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இருப்பினும் இன்றுவரை தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் தொடர்ந்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் உள்ள சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என தில்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை வரவேற்று கீதாஞ்சலி ஜே ஆங்மோ கூறியதாவது:
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்த உத்தரவு மிகக் குறுகிய நேரத்தில் வந்துள்ளது. தனக்கான மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் உள்ளது.
சோனம் வாங்சுக்கை காவல்துறையினர்தான் தூக்கிச் சென்றனர்; மருத்துவமனை ஊழியர்கள் அல்ல. அவரை ஐசியூவில் வைத்தனர். இது தேவையே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவையே இல்லை. மருத்துவமனைக்குள் மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று தெரிவித்தார்கள். ஆகையால், யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரது உடல்நிலை சீராக இல்லை என்றாலும் அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல. அரசாங்கத்தை விட அவருடைய உடல்நிலை மீது எங்களுக்கு அக்கறை உண்டு. நாங்கள் எங்கு சிகிச்சை பெற வேண்டும் என முடிவு செய்வது எங்களின் அடிப்படை உரிமை.
ஏனென்றால், நோயாளியின் மனநிலை மிக முக்கியம். எனவே, தில்லி உயர் நீதிமன்றத்தின் எங்களுக்கு சாதகமான இந்த உத்தரவால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கீதாஞ்சலி ஜே ஆங்மோ தெரிவித்துள்ளார்.
Summary
Sonam Wangchuk's wife, Gitanjali J. Angmo, stated today that they are more concerned about his health than the government is.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்: உயர்நீதிமன்றம் அதிரடி!

உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன்! சோனம் வாங்சுக் வெளியிட்ட கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

மருத்துவமனையில் சிகிச்சையா? சட்டவிரோத தடுப்புக் காவலா? சோனம் வாங்சுக் மனைவி கேள்வி








