நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்: உயர்நீதிமன்றம் அதிரடி!

சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற தில்லி உயர்நீதிமன்றம் பரிந்துரை தொடர்பாக..

News image

சோனம் வாங்சுக் - PTI

Updated On :21 ஜூலை 2026, 4:16 pm IST

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தில்லியில் உள்ள சஃபர்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனைக்கு மாற்ற தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக கடந்த 28 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து, தில்லி போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக மத்திய அரசுக்கு சொந்தமான தில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வாங்சுக்கை தனியர் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி, அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து ஞாயிறன்று நீதிபதி மினி புஷ்கர்ணா சோனம் வாங்சுக்கின் சிகிச்சையில் தலையிட வேண்டியதில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அவரது மனைவி தில்லி உயர்நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். அவரது மனு தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இதையடுத்து சோனம் வாங்சுக்கின் நோயியல் குறிப்புகள் குறித்து மருத்துவ அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றைப் பரிசீலித்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து ஜூலை 21-ல் முடிவு செய்யப்படும் என்று கூறியது.

அதனடிப்படையில், வாங்சுக்கின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று நடைபெற்ற வழக்கில், வாங்சுக்கை குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனைக்கு மாற்றுவதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

இருப்பினும், மருத்துவ ஆலோசனையை மீறி மேடான்டா மருத்துவமனையிலிருந்து அவர் வெளியேற முயற்சிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

The Delhi High Court on Tuesday proposed shifting activist Sonam Wangchuk, who has been on an indefinite fast since June 28 over alleged examination irregularities, from Safdarjung Hospital here to Medanta Hospital in Gurugram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.