கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் அடுத்த போராட்டம் புணேவில் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. அண்மையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 7,000 மக்கள் பங்கேற்றதாகக் கூறப்பட்டது. இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்திய இந்தப் போராட்டம் அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியது. இதனைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று அபிஜீத் தீப்கே நேற்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து சமூக ஊடக பக்கத்தில் அபிஜீத் தீப்கே பதிவிட்டுள்ளதாவது:
”மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, வரும் ஜூன் 11 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் புணேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெற உள்ளது. எத்தனை புணே கரப்பான்பூச்சிகள் கூடும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, தில்லியில் நடைபெற்ற போராட்டத்துக்கு போராட்ட நாளன்று காலையில்தான் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றனர். எனவே, புணேவில் நடைபெற உள்ள இந்தப்போராட்டத்துக்கு அனுமதி பெற்றார்களா? இல்லையா? என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
Summary
Abhijit Deepke, leader of the Cockroach People's Party, announced on Monday that the party's next protest would be held in Pune.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய கல்வி அமைச்சா் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவா் அறிவிப்பு

கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!

நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




