இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

2029 மக்களவைத் தேர்தல் பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்க வேண்டும்: சிவசேனை

2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி எம்.பி. தெரிவித்தது பற்றி...

Sanjay Raut

சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் - dps

Published On :

2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று சிவசேனை (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு குளறுபடி, எஸ்.ஐ.ஆர்., வாக்குத் திருட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒருமனதாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இது குறித்து பேசிய சஞ்சய் ராவத், ”இந்தியா கூட்டணியின் ஒரே நோக்கம், ஊழல்வாதிகளையும் மக்களைச் சுரண்டுபவர்களையும் அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதாக இருக்க வேண்டும். இதுவே மக்களின் குரலாகவும் விளங்கும்.

2029 மக்களவைத் தேர்தலுக்கான, இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இதுவே எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Summary

Shiv Sena (UBT) Rajya Sabha MP Sanjay Raut urged the INDIA bloc on Monday to announce its Prime Ministerial candidate for the 2029 Lok Sabha elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.