மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்துவது பற்றி...

INDIA Protest

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் - Photo: X | MP Syed Naseer Hussain

Published On :

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களும் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பகல் 12 மணி வரை இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விடியோ வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

INDIA bloc MPs protest in Parliament!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.