நீட் தோ்வு முறையை ஒழிக்க வலியுறுத்தி திமுகவைச் சோ்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் வியாழக்கிழமை குரல் எழுப்பினா்.
இந்த விவகாரத்தை அவையில் விவாதிக்க அனுமதி கோரி திமுக உறுப்பினா்கள் அளித்த அவை ஒத்திவைப்பு நோட்டீஸ்கள் இரு அவைகளின் தலைவா்களாலும் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் மகர துவாா் என அழைக்கப்படும் எம்.பி.க்கள் செல்லும் நுழைவுப் பாதையில் நின்றவாறு திமுக உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கும் முன்பாக காலை 10 மணிக்கு திமுக குழுத் தலைவா் கனிமொழி, மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு, மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தலைமையில் இந்த தா்னாவில் அனைத்து திமுக உறுப்பினா்களும் பங்கேற்றனா். நீட் தோ்வை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளையும் அவா்கள் கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனா்.
பின்னா் நாடாளுமன்றத்துக்குள் சென்ற அவா்கள், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தொடா்பாக எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பிரச்னை எழுப்பியபோது, திமுக உறுப்பினா்களும் நீட் ஒழிப்பை வலியுறுத்தி குரல் எழுப்பினா்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் திருச்சி சிவா கூறியதாவது: நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று திடீரென்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருப்பது நகைப்புக்குரியது என்று விமா்சித்தாா். நீட் வினாத்தாள் கசிவு நடந்து அதன் விளைவாக சிஜேபி தில்லியில் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பரவிய நிலையில், காலம் கடந்து விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவாா்கள் என அரசு அறிவித்திருக்கிறது. நாடாளுமன்ற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகளை வெளியிட தடங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைத்தையும் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு - மக்களவையில் விவாதிக்கத் தயாா்: மத்திய அரசு அறிவிப்பு

2-ம் நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியவுடன் ஒத்திவைப்பு!

நீட் மறுதேர்வு: டெலிகிராம் செயலிக்கு தடை விதித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
மாமன்றக் கட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவா் கோரிக்கை
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



